பாலைவன மண்ணில் மாலை நேர மங்கையர் திருவிழா
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்" என்ற பாரதியின் புரட்சி வரிகளுக்கு உயிரூட்டி சாதனைப் பெண்களாக திகழ்ந்து கொண்டிருக்கும் சாதனையாளர்களை சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கொண்டாடி கௌரவிக்கும் விதமாக ஒருங்கிணைந்த தமிழர் பேரவையின் (OTP) ஏற்பாட்டில் "மாண்புமிகு மங்கையர்" கலைத் திருவிழா கடந்த 29.02.2024 அன்று கத்தார் MIE-SPPU அரங்கில்
ஒருங்கிணைந்த தமிழர் பேரவையின் தலைவர் திரு. இப்ராஹிம் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
வயதில் மூத்த மகளிரை கௌரவிக்கும் விதமாக அவர்களின் கரங்களால் விளக்கேற்றப்பட்டு விழா துவங்கப்பட்டது.
கத்தார் இந்திய தூதரக அதிகாரி திரு.சந்தீப் குமார் (Deputy chief of Mission) அவர்கள் தலைமை விருந்தினராகவும், ICBF யின் பிரதிநிதிகள் தலைவர் திரு. ஷாநவாஸ் பாவா அவர்கள், துணை தலைவர் திரு. தீபக் ஷெட்டி அவர்கள், பொருளாளர் திருமதி. குல்தீப் கவுர் அவர்கள், செயலாளர் திரு. முஹம்மது குன்னிஹா அவர்கள், இன்சூரன்ஸ் தலைவர் திரு. அப்துல் ரவூப் அவர்கள், ICC பொதுச்செயலார் திரு. மோகன் குமார் அவர்கள், ICBF ஆலோசனை குழு உறுப்பினர் திரு. ராமசெல்வம் அவர்கள், கத்தார் தமிழர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் ஒருங்கிணைந்த தமிழர் பேரவையின் ஆலோசனை குழு உறுப்பினர் திரு. ராஜாவிஜயன் அவர்கள், முத்தமிழ் மன்ற தலைவர் திரு. குரு அவர்கள், சமனவயம் தலைவர் திரு. ரவீந்திர பிரசாத் அவர்கள்,
யாழினி டிரேடிங் நிர்வாக இயக்குனர் திரு. குமார் அவர்கள், கத்தார் தமிழர் சங்கம் ஸ்பான்சர்ஷிப் செயலாளர் திரு. பாண்டியன் அவர்கள், Yafa கார்கோ நிர்வாக இயக்குனர் திரு. ஷேக் மைதீன் அவர்கள், சோழன் ரெஸ்டாரன்ட் நிர்வாக இயக்குனர் திரு. சதீஷ்குமார் அவர்கள் மற்றும் கத்தார் வாழ் தமிழ் தொழிலதிபர்கள், தமிழ் ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் எனப் பலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளைப் போற்றும் வண்ணம் பரதம், சிலம்பம், பறையிசை என கலைக் கொண்டாட்டங்களும், மாணவர்களின் நடன நிகழ்ச்சிகளும், மருத்துவரின் உடல்நலம் குறித்து விழிப்புணர்வு மற்றும் பெண் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் சிறப்பு அழைப்பாளர்களின் பேச்சுகள், இந்தியப் பெண் ஆளுமைகளைப் போற்றும் மேடை நாடகம் ஆகியவை சிறப்பாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சமூக சேவை, மருத்துவம், தொழில் முனைவோர், கலை, பண்பாடு, கலாச்சாரம், விளையாட்டு, விவசாயம், இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனைகள் பல செய்து பலருக்கும் முன்னுதாரமாகத் திகழும் சாதனையாளர்களுக்கு ஒப்புரவுச் செம்மல், கலைக்கோமகள், ஆடுகள மங்கை, பெருவணிகப் பெருமாட்டி, பைஞ்சுடர்ப் பாவை, தமிழ்க்களஞ்சியம் ஆகிய பெயரில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, பெண்கள் முன்னேற பெரிதும் காரணம் வீடா? நாடா? என்ற தலைப்பில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பட்டிமன்றம் நடைபெற்றது.
இவ்விழாவில் பேரவை நிர்வாகிகள் திரு. ராஜா விஜயன், திரு. சிவராமன், திரு. செந்தமிழ் செல்வன், திரு. செந்தில், திரு. ஆண்டோ டிக்சன், திரு. விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருமதி.சுஜி விஜயகுமார் அவர்களும் திரு.அப்துல் ஹாழிர் அவர்களும் திறம்பட தொகுத்து வழங்கிய இப்பெருவிழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த கத்தார் வாழ் தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் ஒருங்கிணைந்த தமிழர் பேரவையின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
அன்புடன்
ஒருங்கிணைந்த தமிழர் பேரவை